விவசாயத்திற்காக டிராக்டர்களில் சென்ற காலம் மாறி, ஐடி நிறுவனங்களுக்கும் டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உருவாகிவிட்டது வினோதமாக உள்ளது. பெங்களூரு நகரில் உள்ள பல ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்கு டிராக்டர்களில் செல்ல வேண்டிய நிலை உருவானது.
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்தது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஏமலூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் நேற்று தங்கள் அலுவலகங்களுக்கு டிராக்டர்களை எடுத்துச் சென்றனர். பெங்களூரு நகரத்தில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு டிராக்டர் சவாரி செய்வது முற்றிலும் புதிய அனுபவமாகும்.
Tags:
இந்தியா