மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் நீலிவனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. நீலிவனேஸ்வரர் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து கோவிலின் வடக்கு பிரகாரத்தில் வைகை அணையை போன்று தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த இடத்தில் எழுந்தருளினார். அங்கு தண்ணீர் அணையை உடைத்து, மீண்டும் அதை சரி செய்வது போன்றும், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த வரலாற்றினை ஓதுவார்கள் விளக்கிக் கூறினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்