திருப்பைஞ்ஞீலி அருகே பஸ் படியில் பயணம் செய்த கர்பிணி பெண்ணின் கணவர் பலி


 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கீழ கவுண்டம்பட்டி யில் அதே ஊரை சேர்ந்த சேகர் என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது கவுண்டம்பட்டி கீழூர் அருகே பஸ் திரும்பும் போது  படிக்கட்டில் பயணம் செய்ததாக தெரிகிறது அப்போது நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில் இவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று சிலர் கூறினர் மற்றும் சிலர் மதுபான கடைகள் இருப்பதால் தான் இதுபோல் விபத்து நடக்கிறது என்றும் மதுபான கடைகளை மூடினாள் இதுபோல் விபத்தை தவிர்க்கலாம் என்றும் கூறினர்.

சொந்த ஊரிலேயே பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது அந்த கிராமத்திற்கு எங்கும் இருள் சூழ்ந்தது போல் உள்ளது.

இவருக்கு இரண்டு குழந்தைகளும் மற்றும் அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post