வெயிலின் தாக்கத்தால் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மயக்கம்

 

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சினை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

முன்னதாக நிகழ்ச்சியில் காவல்துறை மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதற்காக காலை 9 மணியிலிருந்து மாணவ- மாணவிகளை திறந்த வெளி மைதானத்தில் அமர வைத்தனர். 12 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றதால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஒரு சில மாணவ மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

உடனடியாக முன்னெச்சரிக்கையாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் மயக்கமடைந்த மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.


Post a Comment

Previous Post Next Post