திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி இல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை யும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை சந்தை என்பதால் மண்ணச்சநல்லூர் பகுதியிலேயே மிக பெரிய சந்தையாக இருந்து வருகிறது.
இங்கு 200கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்ய கூடுவார்கள். இரவு 9 மணிவரை நடைபெறும் இந்த வாரசந்தைக்கு ஒரு மின்சார வெளிச்சம் கூட கிடையாது. வியாபாரிகள் இரவு வருவதற்குள் வியாபாரத்தை முடித்துவிட்டு செல்ல வேண்டும், இல்லையென்றால் தனது சொந்த செலவில் சிறிய அளவு ஜெனரேட்டர் தயார் செய்து, சொந்த செலவில் எரிபொருள் நிரப்பி வெளிச்சம் கொடுக்க வேண்டி உள்ளது.
ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வசூலிக்கும் நிர்வாகம், ஒரு அடிப்படை ஆதாரம் மின் வெளிச்சம் கூட கொடுக்காமல் வசூல் செய்வதில் மட்டும் முன்னோடியாக திகழ்கிறது.
இதுமட்டும் இல்லாமல், வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் அவசர காலத்திற்கு செல்ல ஒரு கழிப்பறை வசதி கூட இல்லாமலும் இருந்து வருகிறது.
ஆகையால், சந்தைக்கு மின் வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதி செய்து தர வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

