போலீஸ் பாதுகாப்புடன் மட்டன் கறி விற்பனை ; தீபாவளி படு ஜோர்

 

நரகாசுரனை வதம் செய்த இந்நாள், அந்நாளை புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி,  அசைவ உணவு உண்ணு. பட்டாசு வெடித்து கொண்டாடுவது தான் தீபாவளி திருநாள்.

ஒரு வாரமாக துணிக்கடையில், இரண்டு நாளாக பட்டாசு மற்றும் பேக்கரி கடையில், இன்று கறி கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதுவும் போலீஸ் பாதுகாப்புடன் என்றால் ஒரு படி அதிகம்தான். 

அந்த வகையில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம்  தாலுகா,  பாவூர்சத்திரம் கிராமத்தில் தீபாவளி விழாவுக்காக ஆட்டு கறி வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, விற்பனை படு ஜோர் ஆக நடைபெற்று வருகிறது.

Post a Comment

Previous Post Next Post