மேலும் மாவட்ட நியமன அலுவலருக்கு வரப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் சீல் செய்யப்பட்ட நவல்பட்டு ரோடு திருவரம்பூர் பகுதியில் செயல்பட்டுவரும் ஸ்டார் மளிகை கடை ஆய்வு செய்தபோது சீல் செய்ததை மீறி பின்புறம் கதவு வழியாக உணவு வணிகத்தில் ஈடுபட்ட கண்டறியப்பட்டது. கடையின் உரிமையாளர் குத்தூஸ் என்பவரின் மீது உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன் திருவரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கடை உரிமையாளர் குத்தூஸ் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆய்வின்போது அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் வருவாய் அலுவலர் காவல்துறை அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் செய்தால் சீலையை அகற்றி விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.