கிராமசபை கூட்டத்தில் பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை ; குடிநீர் பிரச்சனையை விரைவில் முடித்து தர இளைஞர்கள் வேண்டுகோள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கவுண்டம்பட்டி மேலூர் ஸ்ரீ மகா சூலினி மாரியம்மன் கோவிலில் திருப்பஞ்சலி பஞ்சாயத்து சார்பில் 75வது சுதந்திர பெருவிழாவில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது 

இதில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 

நிகழ்வில் மூவராயம்பாளையம் மேலூரில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் காவிரி குடிநீர் செல்லவில்லை என்று புகார்கள் எழுந்த வண்ணம் ஒன்று இருந்திருக்கிறது.

 கடந்த மூன்று கிராம சபை கூட்டங்களிலும் இதுபற்றி புகார் மனு அளிக்கப்பட்டதாகவும் அதைப்பற்றி எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் கிராம இளைஞர்கள் சார்பாக கூறப்பட்டது.

மற்றும் இது பற்றி பஞ்சாயத்து தரப்பில் கூறப்பட்டது என்னவென்றால் அங்கு மேட்டு பகுதியாக இருப்பதால் குடிநீர் மேல் நீர்த்தேக்க தொட்டிக்கு செல்ல முடியவில்லை. இருந்தும் ஒரு சில வீடுகளுக்கு குடிநீர் சீராக சென்று கொண்டிருந்தது மற்ற வீடுகளுக்கும் செல்ல வேண்டும் என்பதற்காக குடிநீர் கிணறு போன்ற ஒன்று அமைத்து அதில் நீரை நிரப்பி மறுபடியும் மேல் நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லலாம் என்று வேலை ஆரம்பித்ததாகவும் அதனை ஒரு சிலர் சொந்த பிரச்சனைக்காக தலையிட்டு அந்த வேலையை நிறுத்தி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த முறை கண்டிப்பாக ஒரு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தருவதாக பஞ்சாயத்து தரப்பில் கூறப்பட்டது.

மற்றும் குறைவான விலையில் உழவு ஓட்டுவது, மானிய விலையில் மோட்டார் பம்பு செட்டுகள் தருவது, விவசாயம் செய்பவர்கள் செக்கு மிஷின் போட 40% மானியம் தருவது போன்ற விவசாயம் சார்ந்த விவரங்களை விவசாய பொறியியல் துறை அதிகாரி திவ்யா கூறினார்.

Post a Comment

Previous Post Next Post