திருவாசியில் உள்ள பழமையானமாற்றுரைதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தேவாரம் பெற்றஆலயங்களில் 62வது ஸ்தலமும் வன்னிவனம் எனபெயர் வாய்ந்ததும் அன்னமாம் பொய்கைஎனும் புண்ணியதீர்த்தத்தையுடையது இக்கோயிலில் வழிபட்டால் நரம்புசமமந்தமானநோய்கள் குணமாகும். இடம், நிலம் சம்மந்தபட்ட பிரச்சினைகளும் தீரும். குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வரும்,எதிரிகள் நிறைய உள்ளவர்கள் வழிபட்டால் எதிரிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். இப்படி பக்தர்களின் நேர்த்திகடனை தீர்க்கவல்லது இக்கோயிலின் சிறப்புகளாக கூறுகின்றனர்
இவ்வளவு சிறப்புமிக்க இக்கோயிலின் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டிகாலை 7 மணிக்குவிக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் உள்ளிட்டபூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்படத்துடன் ஆலயம் சுற்றிவந்து கொடிமரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
தினமும் மாற்றுரைதீஸ்வரர் கேடயம், சேசவாகனம, அன்னவாகனம், சிம்மவாகனம் உள்ளிட்டவாகனங்களில் ஆவேலம் வந்து பக்தர்களுக்கு சேவைசாதிக்கிறார் விழாவின் முக்கியநிகழ்ச்சியானதேரோட்டம் வரும் 11ஆம் தேதிநடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் சிதம்பரம், கோயில் செயல் அலுவலர் ஜெகதீஸ்வரன், உபயதாரர்கள், கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள், திருவாசி மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்