சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி டெண்டர் எடுப்பதில் ரகளை - செய்தியாளர்களை தாக்க முயற்சி


திருச்சி சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் வாகன வரி வசூல் ஒப்பந்தப்புள்ளி டெண்டர் பெட்டியினை சீல் வைத்து மூடாமல் வெறும் பூட்டு போட்டு பூட்டியுள்ளதால் முறைகேடு நடந்துள்ளது எனக் கூறிய ஒப்பந்ததாரரை தாக்க முயன்ற திமுகவினர்.

டெண்டரில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய பேரூராட்சி அலுவலகத்தில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால் பாரபட்டமாக செயல்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரின் நடவடிக்கைகள் தெரியவரும் என பாதிக்கப்பட்ட ஒப்பந்ததார்கள் குற்றச்சாட்டு.

சம்பவங்களை வீடியோ எடுத்த செய்தியாளர்களை வீடியோ எடுக்க கூடாதெனவும் சமயபுரம் திமுக நகர செயலாளர் துரை ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர் ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கம் உள்ளிட்டோர் மிரட்டினர்.

வாகன வரி வசூல் ஏலம் நடக்கும் இடத்திற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்த திமுகவினர் மற்றும் சம்பவங்களை வீடியோ எடுத்த செய்தியாளர்கள் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சமயபுரம் கண்ணணூர் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post