விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் கலெக்டர் அறிவிப்பு

 

திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால் நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில்  சுய உதவிக்குழு கடன், விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் கடன், போன்ற அனைத்து விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்ட விவாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேசன் கார்டு நகல், நிலவுடமை தொடர்பான  கணினி சிட்டா, பயிர்சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம்.

 கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம்  செலுத்தி, உடன் உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயனடையலாம்.
சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் ஏதாவது சேவைக் குறைபாடுகள் இருந்தால், திருச்சி மண்டல இணைப்பதிவாளரை 7338749300, திருச்சி சரக துணைப்பதிவாளரை 7338749302,  லால்குடி சரக துணைப் பதிவாளரை 7338749303 முசிறி சரக துணைப்பதிவாளரை 7338749304 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post