திருப்பைஞ்ஞீலி ஶ்ரீ வனத்தாயி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தில் 

திருப்பைஞ்ஞீலி, மூவராயன்பாளையம், வால்மால்பாளையம், கவுண்டம்பட்டி, ஈச்சம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீ வனத்தாயி அம்மன் கோயில் 

அனைத்து கிராமத்தார்களிடம் இருந்து வரி வசூல் செய்யப்படும், இந்த கோவிலின் குடிபாட்டு மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பக்த பெருமக்களின் இருந்து அன்பளிப்பு பெறப்பட்டு கோயில் முன்பு குதிரை சிலை, வனத்தாயி அம்மன் கோவிலின் உள்ளே மண்டபம், அய்யனார் கோவில் மண்டபம், கோபுர வர்ண வேலைகள், கோவிலுக்கு புதியதாக நுழைவு வாயில் உள்ளிட்ட வேலைகள் செய்யப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சனிக்கிழமை தீர்த்தகுடம் மற்றும் முளைப்பறி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட அய்யர்கள் வரவழைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு இன்று காலை 9.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Post a Comment

Previous Post Next Post