திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சோழங்கநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்கிட கோரி சிறுகாம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே வருகின்ற நாளை 10.00 மணிக்கு அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக சிறுகாம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் நடத்த இருந்ததால்.
அமைதிப் பேச்சுவார்த்தை மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
புள்ளம்பாடி புது வாய்க்காலில் இருந்து வருகின்ற உபரிநீரை சோழங்கநல்லூர் ஏரிக்கு கொண்டு வருவது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் நீர்வளத்துறையின் திட்டம் உருவாக்கம் கோட்டம் பிரிவினருடன், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் இணைந்து கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ளப்படும் என அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வாத்தலை ஆற்று பாதுகாப்பு பிரிவு மேலணை உதவி பொறியாளர், மண்ணச்சநல்லூர் மண்டல துணை வட்டாட்சியர், வாத்தலை காவல் துறையினர், சி.பி.ஐ.எம். ஒன்றியச் செயலாளர் சுப்ரமணியன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் செல்வம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் நல்லையன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

