தமிழகத்தில் பாஜக அரசியல் செல்லாது ; ஜனாதிபதி வேட்பாளர் சின்ஹா பேச்சு

 

ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால், ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆதரவு கோரினார். அதனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பேசியதாவது:- சமீப காலமாக ஆளுநர்கள் தங்கள் கடமையை மீறி செயல்படுகின்றனர். ஆளுநர்கள் மாநில அரசியலில் தலையிடுகிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது. பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை. தமிழகத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம். மராட்டிய மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஜனாதிபதி தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்றார். இதனையடுத்து நாட்டு மக்களுக்கு துன்பம் வரும்போதெல்லாம், அதற்கு எதிராக குரல் கொடுத்தவர் சின்ஹா. முதல்-அமைச்சர் மு.கஸ் ஸ்டாலின் ஆதரவுடன் ஜனாதிபதியாக சின்ஹா வெற்றி பெறுவார் என செல்வப்பெருந்தகை கூறினார்.

Post a Comment

Previous Post Next Post