ஒருவரின் வாழ்க்கைமுறையில் உடற்தகுதியின் முக்கியத்துவத்தையும், வழக்கமான ஆற்றல் முறைகளைப் பாதுகாப்பதற்கான தேவையையும் கூறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு திருச்சியின் 3 தமிழ்நாடு ஏர் ஸ்கார்டு என்சிசி இயக்க மாணவர்கள் மற்றும் பணியாளர்களால் சைக்கிள் பேரணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பேரணி பிஷப் ஹீபர் கல்லூரியிலிருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரத்தை கடந்து இறுதியாக அதே இடத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் பணியாளர்களும் மிக மகிழ்ச்சியோடு இந்த காலகட்டத்தில் உடல்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தியும் முழுமனதாக பங்கேற்றனர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்