பாச்சூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் ; தாசில்தார் அதிரடி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த பாச்சூர் கிராமம் உள்ளது .இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாச்சூர் அர்ஜுன தெரு முன் உள்ள மெயின் சாலையில் பொதுமக்கள் அரசுக்கு சொந்தமான நிலத்தினை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.மேலும் தமிழக அரசு சார்பில் கிராமங்களில் அமைக்கப்படும் சமுதாயக்கூடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கு இடம் தேவை என்பதை அறிந்து பொதுமக்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த இடங்களை கண்டறிந்த மனச்சநல்லூர் வட்டாட்சியர் பழனி வேல் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்றாத பொதுமக்களிடம் வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் ,ஜீயபுரம் டிஎஸ்பி பழனி மற்றும் வாத்தலை காவல் ஆய்வாளர் இசைவாணி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின் போது சுமார் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .விரைவில் இந்த இடத்தில் பொதுமக்களில் பயன்பாட்டிற்காக சமுதாயக்கூடம் அமைக்கப்படும் என வட்டாட்சியர் பழனிவேல் தெரிவித்துள்ளார் .

Post a Comment

Previous Post Next Post