திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், கவண்டம்பட்டி மேலூர் ஶ்ரீ மகா சூலினி மாரியம்மன் தேர்த்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கரகம் பாலிப்புடன் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்று நேற்று திங்கட்கிழமை பால்குடம் ஊர்வலத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை தேர் வீதி உலா ஆரம்பித்து கிடா வெட்டுதல், கோழி அறுத்தும், மஞ்சள் நீராடுதலும் முடிந்தது. மாலை 7 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் அருள்வாக்கு கூறும் நிகழ்வில் ஏராளமான சுற்று வட்டார கிராமதார்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.