திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்த கவண்டம்பட்டி - பார்வதிபுரம் செல்லும் பாதையில் இருந்து கவண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை உள்ள தார் சாலை பரிந்து மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி வாகனங்கள் வந்து செல்கிறது.
சாலை மிகவும் மோசமாக இருப்பதால். மாணவர்கள் மிகவும் அவதிக்குளாகின்றனர். ஆகையால் மண்ணச்சநல்லூர் தொகுதியை பொறுத்த வரை தன் தொகுதி மக்களின் குறைகளை கண்டறிந்து. அதை சரி செய்வதில் முன்னோடியாக திகழும் எம்.எல்.ஏ. கதிரவன் விரைந்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்