மஹாராஷ்டிராவின், புனே மாவட்டத்தின் பிரங்குட்டில் உள்ள தொழிற்சாலை பகுதியில், ரசாயனம் தயாரிக்கும் தனியார் ஆலை அமைந்துள்ளது.ஆலையின் ஒரு பகுதியில், நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. இதில், அங்கு பணியில் இருந்த, பலர் சிக்கினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான, 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களில், 15 பேர் பெண்கள் என கூறப்படுகிறது
மாயமான ஐந்து பேரை தேடும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஆலையின், 'பேக்கேஜிங்' பகுதியில் இருந்த, 'பிளாஸ்டிக்' பொருட்களில் தீப்பற்றியதாகவும், அது மற்ற பகுதிகளுக்கு விரைந்து பரவியதாகவும், ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இந்தியா