டாஸ்மாக் பார் லைசென்ஸ் 2 மாதம் நீட்டித்தும் அரசாணை பிறப்பிக்காத நிர்வாகம் & பார் உரிமையாளர்கள் புலம்பல்

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள 4765 டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பாருக்கான டெண்டர் கடந்த 2025 டிசம்பர் 31 உடன் முடிந்த நிலையில் ஆறு மாதம் லைசென்ஸ் நீட்டிப்பு செய்தது அப்போதைய தி.மு.க. அரசு. பிறகு ஜுன் 30ம் தேதியுடன் முடிந்த நிலையில் அடுத்த நாள் ஜுலை 1ஆம் தேதி திடீரென்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பார்களையும் மூடியது த.வெ.க. அரசு.
எப்போதும், ரீ டெண்டர் விடுவதாக இருந்தால், ஜுன் 30ல் முடியும் என்றால், ஜுன் 10&15 ஆம் தேதிக்குள் டெண்டர் ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்பட்டு, அந்த மாதம் 30 அதாவது லைசென்ஸ் முடிவதற்குள் ரீ டெண்டர் வேலைகள் முடிந்து, புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, பார் அடைக்கப்படாமல், தொடர்வது வழக்கம்.
ஆனால், த.வெ.க. அரசு ரீ டெண்டர் பற்றி எந்த நடவடிக்கையும், ஏற்பாடுகளும் ஏதும் செய்யாமல், திடீரென்று ஜுன் 1ஆம் தேதி மூடிவிட்டு, கடந்த திங்கட்கிழமை 7ஆம் தேதி இரண்டு மாதங்கள் பார் லைசென்ஸ் நீட்டிப்பு செய்ததாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், அறிவிப்பு வெளியாகியும் இதுநாள்வரை அரசாணை பிறப்பிக்காததால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பார்களும் மூடிய நிலையில்தான் உள்ளது. அதுமட்டுமில்லாமல், பார் இருந்தால் பாரில் சென்று மது அருந்நதிய மது பிரியர்கள் தற்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் கூட மது அருந்துவதால், சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும்.
இதுகுறித்து பார் உரிமையாளர்கள் சொன்னபோது,
ரீ டெண்டர் விட வேண்டும். இல்லையென்றால் லைசென்ஸ் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம், அந்த வகையில் கடந்த 7ஆம் தேதி 2 மாதம் நீட்டிப்பதாக கூறினர். ஆனால் இதுநாள் வரை அரசாணை பிறப்பிக்காமல் உள்ளது நிர்வாகம், அரசாணை வந்ததும் முடிந்த 10 நாட்களுக்கும் டி.டி. பணம் கட்ட சொன்னால், பார் மூடியிருந்த போதிலும் நாங்கள் பணம் கட்ட வேண்டிய நிலை வரும். ஆகையால், விரைவில் நீட்டிப்பிக்கு அரசாணை கொடுக்க வேண்டும் மற்றும் நடப்பில் உள்ள நாட்களுக்கு மட்டும் டி.டி. பணம் கட்ட சொல்ல வேண்டும் அல்லது ரீ டெண்டர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post