திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் உள்ள நியாய விலை கடையில் வேலை பார்த்து வருபவர் ராஜா (48) இவர் கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றவர் மீண்டும் காலை வந்து பார்த்தபோது நியாய விலை கடையின் பூட்டு திறக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது ரேஷன் கடையில் இருந்த பாமாயில் எண்ணெய் ஐந்து பாக்ஸ் பாக்ஸ் ஒன்றுக்கு பத்து லிட்டர் விதம் 50 லிட்டர் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்து சில்லறை காசு ஆயிரம் ஆகியவை திருட்டுப் போய் உள்ளது தெரியவந்தது இது சம்பந்தமாக ராஜா நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்