கிராம உதவியாளர் பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலகில் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டத்தில் 01

 திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டத்தில் 04

 திருவெறும்பூர் வட்டத்தில் 05

ஸ்ரீரங்கம் வட்டத்தில் 18

மணப்பாறை வட்டத்தில் 06

மருங்காபுரி வட்டத்தில் 07

 இலால்குடி வட்டத்தில் 22

மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 08

முசிரி வட்டத்தில் 09

துறையூர் வட்டத்தில் 18

மற்றும் தொட்டியம் வட்டத்தில் 06

பணியிடங்கள் ஆக மொத்தம் 104 கிராம உதவியாளர் பணி நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 01.07.2025 அன்று குறைந்த பட்சம் 21 பணியிடங்களை வயதும் (அனைத்து பிரிவினருக்கும்). OC வகுப்பினருக்கு அதிகபட்சமாக 32 வயதும், BC /BC(M) / MBC & DNC/SC/SC(A) / ST 37 வயதும் இருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினரில் OC வகுப்பினருக்கு அதிகபட்சமாக 50 வயதும், BC /BC(M)/MBC & DNC/SC/SC(A)/ST  55 வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் விதித்தளர்வு வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும் அதில் தமிழ் ஒரு பாடமாக இருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இதர தகுதிகளாக விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் கிராமம் மற்றும் வட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்பதையும், விண்ணப்பதாரரின் கணவரோ, மனைவியோ உயிரோடு இருக்கும் போது வேறு திருமணம் செய்தவராக இருத்தல் கூடாது இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.08.2025 இப்பணியிடங்களுக்கு https://tiruchirappalli.nic.in

என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து வருவாய் வட்டாட்சியர் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, தகுதியான நபர்கள் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post