தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்யலாம்

 


2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வாங்கி கொண்டாடும் வகையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்களின் ஆணையின்படி, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் வெடிப்பொருள் விதிகள்–2008-ன்படி வெளியிடப்பட்ட படிவம் எண் AE-5-ஐ பூர்த்தி செய்து, கீழ்க்கண்ட ஆவணங்களுடன் 01.09.2025 முதல் திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்ப மனு – ரூ.2/- நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் AE-5.விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் புகைப்படம் – 2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்).கடை அமைவிடத்தின் வரைபடம் (இரண்டு பிரதிகளில்), முகவரி முழுமையாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், மனுதாரர் கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.

உரிமக் கட்டணம் ரூ.500/- ஆன்லைனில் செலுத்தியதற்கான ரசீது.சொந்த கட்டிடம்/காலியிடமாக இருப்பின் 30.09.2025 வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது.வாடகை கட்டிடமாக இருந்தால் உரிமையாளர் சம்மதக் கடிதம் மற்றும் ரூ.20/- மதிப்புள்ள முத்திரைத்தாளில் வாடகை ஒப்பந்தம்.

திருச்சி மாநகராட்சியில் வணிக உரிமம் பெற கட்டணம் செலுத்திய அசல் ரசீது.மாநகராட்சி/பொதுப்பணித்துறை/மற்ற துறைகளின் கட்டிடமாக இருந்தால், அந்த துறை அலுவலரின் மறுப்பின்மை கடிதம். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை நகல்.அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களும் – 4 நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

முழுமையான விண்ணப்பங்கள் 30.09.2025 மாலை 5.30 மணி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் பெறப்படும் அல்லது முழுமையற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. உரிமம் வழங்குவது தொடர்பாக காவல்துறை ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும்.

மேலும், விண்ணப்பங்கள் நேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மட்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post