திருச்சி ஆர்.டி.ஓ. மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை ; மகள் வேறு சமுதாய இளைஞரை காதலித்தால் இந்த முடிவு என தகவல்

நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன், 56. அவரது மனைவி பிரமிளா, 51, இருவரும், வகுரம்பட்டியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். சுப்ரமணியன், திருச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலராகவும், பிரமிளா, ஆண்டாபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினர்கள்.

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்த திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலரான இவர் பறக்கும் படையில் பணியாற்றியவர் சுப்பிரமணியன் (54) மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும் உடல் துண்டான நிலையில் மீட்கப்பட்டடனர். ரயில்வே காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களது மகள் மாற்று சமுதாய இளைஞரை காதலித்தால் நேற்று இரவே காதலை கைவிடுமாறு கூறி தற்கொலைக்கு முயன்றவர்களை மகள் தடுத்தாகவும் கூறப்படுகிறது.  மனமுடைந்த இருவரும் இன்று அதிகாலை ரயில் முன்பு தற்கொலை செய்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post