திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் 09-05-2025 அன்று நடைபெற உள்ளது
இதனையொட்டி இன்று திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோவில் அலுவலகத்தில் பி.சி. மீட்டிங் நடைபெற்றது.
திருவிழாவை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்தி வைப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இ.ஓ. தாமத படுத்துவதாக சிறு சலசலப்பு ஏற்பட்டது.
முடிவில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பேசுகையில்
திருவிழாவின் போது எந்த ஒரு பிரச்சினையும் வரகூடாது என்பதற்காக கோவிலின் பழைய முறைப்படியே அனைத்தும் கடைபிடிக்க வேண்டும்.
தேர் மீது மாலை போட யாருக்கும் அனுமதி கிடையாது என்று உறுதி அளித்தார்.
கூட்டத்தில், கோவில் இ.ஓ., ஏ.சி., மண்ணச்சநல்லூர் போலீஸ் துணை ஆய்வாளர், அனைத்து கிராம பட்டையதாரர்கள் உடன் இருந்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்