குப்பை கொட்டும் இடத்தை ஆய்வு செய்து இரும்பு பலகை அமைத்த ஏ.சி. ; மீறி குப்பை கொட்டினால் காவல்துறை மூலம் நடவடிக்கை

 


சுமார் மூன்று வருடங்களாக சிவன் கோவில் பின்புறம் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு இருப்பதாக பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் கூறப்பட்டது.

இறுதியில் நேற்று இந்து அறநிலையத்துறை ஏ.சி. ஆய்வு செய்து இரும்பு பலகை அமைத்து, அதில் இங்கு யாரும் குப்பைகள் கொட்ட கூடாது, மீறி கொட்டினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த இடத்தை சுற்றி பென்சிங் போட்டு கம்பி வேலை அமைக்க உத்தரவிட்டார். 60 நாட்களுக்குள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

Post a Comment

Previous Post Next Post