திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்சீலி அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கவுண்டம்பட்டி மஹா சூலினி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் 25 வருடத்திற்கு முன்பு கூரை கொட்டகையில் இருந்து ஒட்டு கட்டிடத்திற்கு மாற்றி கும்பாபிஷேகம் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்றது.
பிறகு 2013 ஆம் ஆண்டு நவகிரகங்கள் மற்றும் ஒரு புதிய விநாயகர் அமைத்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின் கோவிலில் சில புணரைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
விழாவில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேதை சிறப்பித்தனர்.
அந்த நேரத்தில் மஹா அன்னதானமும் நடைபெற்றது. விழாவின் ஏற்பாடுகளை கிராம பட்டையதார்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்
Tags:
நம்ம ஊரு செய்திகள்