திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்சீலி அருகே கவுண்டம்பட்டி மேலூர் ஶ்ரீ மஹா சூலினி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக
ஆர்.வி.பாலமுருகன், ஆர்.வி.பரதன், ஆர்.வி.ராம்பிரபு கலந்து கொண்டனர்.
விழாவில் ஆர்.வி.ராம்பிரபு பேசுகையில்,
திருச்சி டவுனுக்கு சித்தாள், கொத்தனாராக வருபவர்கள் பெரும்பாலும் முத்தரையர் சமுதாயத்தினர் ஆக இருந்து வருகின்றனர்.
உங்கள் குழந்தைகள் திருச்சிக்கு வேலைக்கு வந்தால் இன்ஜினியர் ஆக தான் இனி வரணும்.
படிச்சா தான் சமுதாயம் முன்னேறும். படிச்சு இன்ஜினியர் ஆகுங்கள் என்று பேசினார்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்