விஜய் கட்சிக்காக எங்கள் வாழ்வாதாரத்தை இழந்தோம் ; மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முத்தரையர்கள் போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஓராண்டு ஆன நிலையில், த.வெ.க. கட்சியில் தமிழகம் முழுவதும் கட்சியல் பொருப்புகள் போடப்பட்டது.

 அதே போல் திருச்சி மாவட்டத்திலும் பொறுப்புகள் வழங்கப்பட்டன, அந்த வகையில் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் முத்தரையர் சமுதாயத்தினரே வாக்கு வங்கியாக இருந்து வருகின்றனர். நியமனம் செய்யப்பட்ட 6 மாவட்ட செயலாளர்கள் ஒருவர் கூட முத்தரையர்  சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஒரு போஸ்டர் அடிக்கப்பட்டு, திருச்சி மாவட்டம் முழுவதுமாக ஒட்டப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது ;

உங்கள் கட்சிக்காக எங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததே மிச்சம் என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களில் எல்லாம் பிற பெரும்பான்மை சமுதாயத்திற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கிவிட்டு, திருச்சி மாவட்டத்தில் மட்டும் எங்கள் முத்தரையர் சமுதாயத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவி கூட வழங்காமல் அநீதி இழைத்த த.வெ.க. தலைவர் விஜயக்கு ஒட்டுமொத்த முத்தரையர்களின் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எங்களுக்கு அங்கீகாரம் தாரா, நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா... கிடைக்கும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை... முத்தரையர் சமுதாய வாக்கு உங்களுக்கு இல்லை... விழித்துக்கொள் முத்தரையர் இனமே என்று மக்கள் இயக்கத்திலிருந்து விஜய்க்கு உழைத்த முத்தரையர் சமுதாயத்திற்கு அங்கீகாரம் கொடுக்காத த.வெ.க. தலைவரை கண்டிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post