திருச்சி மாவட்டம் துறையூர் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்ப்பால் வார தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை திருமதி.லலிதா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் பிறகு இணை உணவுடன் 2 வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எடுத்துக் கொள்ள கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் திருமதி கிருஷ்ணவேணி சி என் ஐ அவர்கள் பேசிய போது பூண்டு, சீரகம், வெந்தயம், கம்பு, தேன்நெல்லி போன்ற பால் சுரக்கும் உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்துக் கொடுத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையா நன்றி கூறினார்.