வழக்கறிஞரை அரிவாளால் வெட்ட முயன்றவர் கைது



திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் பகுதியில் முன் விரோத காரணமாக வழக்கறிஞரை அரிவாளால் வெட்ட  முயன்ற நபரை  போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ண்ணச்சநல்லூர் அருகே ராசாம்பாளையம் கிராமத்தில் உள்ள கீழுர் பகுதியை சேர்ந்த தானு (38). இவர் திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 10 வருடங்களாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பட்டாசு பாலு (எ) பாலசுப்பிரமணியன்(35).
இந்நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் இவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இதில் இருவருக்குமே காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து பாலு மது போதையில் தொடர்ந்து அக்கடி வழக்கறிஞரிடம் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் நேற்று முன்தினம் 23ம் தேதி இரவு பாலு மது போதையில் வழக்கறிஞர் தானு வீட்டிற்கு சென்று வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒருகட்டத்தில் மது போதை தலைக்கேறிய பாலு வழக்கறிஞரை கொலை மிரட்டல் விடுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட ஓட ஓட விரட்டிவுளள்னர்.


இதில் தன் உயிரை காப்பாற்ற ஊருக்குள் சென்ற வழக்கறிஞர் தானு அப்போது பொதுமக்கள் திரண்டு மீட்டனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் புகார் அளித்தார். புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு சென்று பட்டாசு பாலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


நள்ளிரவில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் ராசபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

Post a Comment

Previous Post Next Post