சென்னையில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்வதற்காக திருச்சி வழியாக சென்ற கவிஞர் வைரமுத்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தை கடந்தார். அப்போது காவிரி ஆற்றில் இரு கரைகளும் தொட்டு சீறி பாய்ந்து ஓடும் நீரை கண்டு சாலை ஓரம் காரை நிறுத்தினர். பின்னர் காவிரி பாலத்தின் மீதிருந்து ஆற்றில் செல்லும் நீரின் அழகை ரசித்தார்.
இதைக்கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரிடம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து காவிரி ஆற்றினை ரசித்த கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் ஒரு கவிதை ஒன்று வெளியிட்டுள்ளார். காவிரி ஆற்றின் அழகையும், அதன் வரலாறையும் எடுத்துரைத்து வெளியிட்டுள்ள இந்த கவிதையின் முடிவில் காவிரியின் கால்களை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம், அணை கட்ட விடமாட்டோம் என முடிவில் கூறியிருந்தார்.
கவிதையில் கூறியிருப்பதாவது...
பாய்ந்தோடும் காவிரியே
எங்கள் பரம்பரையின் தாய்ப்பாலே...
வரலாற்றின் இரத்தமே...
எங்கள் வயல்களின் திரவச்சாப்பாடே...
பல்லாண்டு தாண்டி நீ பெருக்கெடுத்து ஓடுவதாய் கேள்விற்று
கிறுக்கெடுத்து ஓடி வந்தேன்...
கரிகாலன் கால் நனைத்தது நீதான்...
கவிஞர்கள் மீது திரவமுட்டுக்கள் தெரித்தது நீதான்..
ராஜராஜனின் வால்முனையும் உழவனின் ஏரிமுனையையும் தீட்டித் தந்தவள் நீதான்...
கரைதொட்டு பாய்தோடும் காவிரியே உன் அழகில் பறைகொட்டி பறைகொட்டி பாவிமனம் கூத்தாடும்...
உடலோடு சேர்ந்தோடும் உயிர்வுதினம் நீதாயே...
கடலோடு சேராமல் கழனிகளை சேர்வாயே...
மழைத்தழைய கடற்காவிரியென கடியலூர் உருத்திரன் கண்ணன் முதல் காவிரி தாயே காவிரி தாயே காதலர் விளையாட பூ விரித்தாயே என கண்ணதாசன் வரை ஈராயிரம் ஆண்டுகளாய் நூறாயிரம் புலவர்களுக்கு பாடுபொருளாகிய பால்நதியே...
நீ யாரோ எமக்கிட்ட பிச்சையள்ள...
எங்கள் உரிமை.
நீ அரசியல் ஆசிர்வாதம் அல்ல ...
எங்கள் அதிகாரம்.
உன் கால்களை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம்.
அணைகட்ட விடமாட்டோம்.