ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்று நெ.1டோல்கேட்டில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 


அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடரலாம் என்ற ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்று திருச்சி புறநகர் மாவட்டம், நெ.1 டோல்கேட்டில் பட்டாசுவெடித்துகொண்டாடினர். 

கடந்த ஜுலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் எனசென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மண்ணச்சநல்லூர் (கிழக்கு) ஒன்றியசெயலாளர் இன்ஜினியர் ஜெயகுமார் தலைமையில் அதிமுகவினர் நெ.1 டோல்கேட்டில் ஒன்று கூடி பட்டாசு வெடித்துபொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவர்கள் கோசங்கள் எழுப்பினர். இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். 


Post a Comment

Previous Post Next Post