திருப்பைஞ்ஞீலியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி பஸ் மறியல்

திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்தில் 100 நாள் வேலை வழங்கவில்லை என அப்பகுதி பஞ்சாயத்து பொதுமக்கள் காலை ஆறு முப்பது மணியிலிருந்து பஸ் மறியல் செய்தனர்.

இது குறித்து ஒருவர் கூறுகையில் வீட்டு வரி, குடிநீர் வரி அனைத்தும் முழுமையாக செலுத்தினால்தான் 100 நாள் வேலை கொடுக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு கூறப்பட்டதாகவும்.

 பொது ஜனங்களும் நகைகளை அடகு வைத்து வீட்டு வரி மற்றும் குடிநீர் வரியை செலுத்தி 100 நாள் வேலைக்கு சென்றதாகவும் தற்போது அனைத்தும் வசூல் செய்து கொண்டும் 100 நாள் வேலை வழங்க வில்லை என கூறினார்.

மறியல் காரணமாக காலையில் ஆறு முப்பது மணியிலிருந்து எந்த ஒரு பஸ்சும் திருச்சிக்கு செல்லவில்லை கட்டிட தொழிலாளர்கள் திருச்சிக்கு சென்றவர்கள் அனைவரும் இறங்கி மறுபடியும் வீட்டிற்கு சென்று விட்டனர்.

போக்குவரத்து பாதிப்பால் பள்ளிக்குச் செல்லும் வாகனங்கள் சிறிது தாமதமாக கிளம்பியது மற்றும் வேறு வழிகளிலும் சென்றது.

மண்ணச்சநல்லூருக்கு பஸ்ஸில் செல்லும் மாணவ மாணவிகள் இதன் காரணமாக பள்ளிக்குச் செல்ல  முடியாமலும் போனது

Post a Comment

Previous Post Next Post