வாத்தலை போலீஸ் நிலையத்திற்கு வந்த இரண்டே நாளில் இளம் காவலர் மாரடைப்பால் இறப்பு

திருச்சியை அடுத்த பெட்டவாய்த்தலை அருகே உள்ள பழையூர் மேடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் வாத்தலை போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை 10.30 மணி அளவில் பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். ெபட்டவாய்த்தலை மில் கேட் அருகே திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென்று மயக்கம் வருவதுபோல் தெரிந்ததால் மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தினார். சிறிதுநேரத்தில் அவர் மயக்கம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமகிருஷ்ணன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் டி.ஐ.ஜி.சரவணசுந்தரின் பாதுகாவலராக பணிாயற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் அவர் வாத்தலை போலீஸ் நிலையத்துக்கு மாறுதலாகி வந்தார். ராமகிருஷ்ணன் இறந்த தகவல் அறிந்த டி.ஐ.ஜி.சரவணசுந்தர் நேரில் வந்து இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.



Post a Comment

Previous Post Next Post