பேய் ஓட்டுவதாக கூறி மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போதகருக்கு ஆயுள் தண்டனை


கேரள மாநிலம் பாலராமபுரத்தை சேர்ந்தவர் ஜோஸ் பிரகாஷ். போதகர் இவரது வீட்டின் அருகே வசித்த தம்பதியின் 13 வயது பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த சிறுமியை பார்த்த போதகர் ஜோஸ் பிரகாஷ், அந்த சிறுமிக்கு பேய் பிடித்திருப்பாக கூறி உள்ளார். மேலும் பேய் ஓட்டி சிறுமியை குணப்படுத்துவதாகவும், சிறுமியின் பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனை நம்பி பெற்றோர், சிறுமியை அவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது போதகர் ஜோஸ் பிரகாஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோஸ் பிரகாசை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இது தொடர்பான வழக்கு மஞ்சேரியில் உள்ள போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு போதகர் ஜோஸ் பிரகாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.


Post a Comment

Previous Post Next Post