திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் புலிவலம் பகுதியில் சாலை விரிவுபடுத்தும் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற ஆரம்பித்து, அதே வேகத்திலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையின் ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் அந்த ஆக்கிரமிப்புகள் அப்படியே போடப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைத் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே ஆரம்பித்த வேகத்தோடு இந்த சாலை விரிவுபடுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..
நெடுஞ்சாலைத்துறை இதில் முழுமையாக தலையிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பணியினை விரைவில் முடித்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Tags:
நம்ம ஊரு செய்திகள்