மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்ற 61-வது தலமாகும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்ததை அடுத்து இக்கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலையில் பல்லக்கிலும், இரவில் சேஷம், கிளி, காமதேனு, ரிஷபம், அன்னம், யாளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் இரவு தங்க குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார்.
திருப்பைஞ்ஞீலி பகுதியில் குற்ற சம்பவங்கள் தடுக்கும் பொறுட்டு புற காவல் நிலையம் திருச்சி மாவட்ட டி.ஜி.பி. திறந்து வைத்தார்
Tags:
நம்ம ஊரு செய்திகள்