அறந்தாங்கி தி ஃபோர்ட்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம்

 

அறந்தாங்கி தி ஃபோர்ட்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் முத்து மீனாட்சி மருத்துவமனை சார்பில் அறந்தாங்கி டி.யி.எல்.சி பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

தி ஃபோர்ட்சிட்டி  ரோட்டாரி சங்கமும் புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையும் இணைந்து அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் உள்ள  டி.யி.எல்.சி பள்ளியில் தலைவர் விகாஸ் சரவணன் தலைமையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.  

ரோட்டரி சங்க பட்டய தலைவர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி துவக்க உரையாற்றினார்.

ரோட்டரி சங்கம் 3000 ஆளுநர் ஜெரால்டு முகாமை துவக்கிவைத்து உரையாற்றினார்.

முத்துமீனாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பெரியசாமி தலைமையில் இருதய நோய் நிபுணர்

மருத்துவர் சரவணன், எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சின்ராஜ், பொது மற்றும் குழந்தைகள் மருத்துவர் சண்முக மாணிக்கம், பல் மருத்துவர் ரைசா பர்வீன் உள்ளிட்ட மருத்துவ குழு முகாமை நடத்தினார்கள்.

இம்முகாமில் ரோட்டரி  3000 துணை ஆளுநர் சுரேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர்சேக் உள்ளிட்ட அறந்தாங்கி தி ஃபோர்ட்சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். 

இலவச மருத்துவ ஆலோசனைகள், இருதய சிகிச்சை, எலும்பு,மூட்டு,பல் பொது மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் ஆகிய சேவைகள் 200 பேருக்கும் எக்கோ 50 பேருக்கும்  வழங்கப்பட்டது.

முன்னதாக ரோட்டரி சங்க செயலாளர் நியூலுக் கணேசன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் நியுடீலக்ஸ் கண்ணன் நன்றி கூறினார்.

Post a Comment

Previous Post Next Post