முசிறி வட்டம் புலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ நவநீத கோபாலகிருஷ்ண பஜனை மடம், அருள்மிகு. தர்மசம் வர்த்தினி அம்பாள் உடனுறை வியாக்கிரபுரீஸ்வரர் ஆகிய திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழா சிறப்பாக இன்று நடைபெற்றது... ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், கும்பாபிஷேக தண்ணீர் மக்கள் வாங்க வந்தார்களா அல்லது மக்களின் வெள்ள கடலில் தெய்வங்கள் மூழ்கியதா என்ற அளவிற்கு கூட்டம் நிறைந்து வழிந்தது....
20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றதால் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்ள மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்...
Tags:
நம்ம ஊரு செய்திகள்