இந்திய மாணவர் பலி எதிரொலி: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை

 

உக்ரைன் கார்கீவ் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்கிற மாணவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைப்பெற உள்ளது. உக்ரைன் ரஷியா இடையேயான போரில் இந்திய மாணவர் உயிரிழந்த நிலையில் அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள், வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


Post a Comment

Previous Post Next Post