தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு நிலங்களை சர்வே செய்ய அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப் பட்டது.
இதன்தொடர்ச்சியாக திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலுக்கு சொந்தமான 11.46 ஏக்கர் நிலம் சர்வே செய்யப்பட்டு முதற்கட்டமாக சர்வே கற்கள் நடும் பணிதொடங்கியது.
இதனை அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவில் பணியாளர்கள் சர்வே செய்யப்பட்ட நிலங்களில் சர்வே கற்கள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உதவி ஆணையர் மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளர் கௌதமன் மற்றும் உத்தமர்கோவிலில் செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்