திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் சித்திரை தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருப்பைஞ்சீலி ஞீலிவனேசுவரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் கேடயத் தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற் றன.

ரிஷப வாகனம் வரையப் பட்ட கொடியை மேளதா ளங்கள் முழங்க கொடிமரத் தில் கோவில் குருக்கள் ஏற்றி னர். தொடர்ந்து தீபாரா தனை நடைபெற்றது. இதில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட அனைத்து கிராம பட்டயதா ரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கிலும், இர வில் முறையே முறையே சிம்மவா சிம்மவாகனம், கிளி வாகனம், யாளி வாக னம், அன்ன வாகனம், பூத வாகனம் ஆகியவற்றிலும் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.5-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப் பாடு நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 10.45 மணிக்கு மேல் 11.35 மணிக்குள் திருக் கல்யாணம் நடைபெறுகிறது. இரவில் யானை வாகனம் மற்றும் கிளி வாகனத்தில் │சுவாமி எழுந்தருளி பக்தர்க ளுக்கு அருள்பாலிக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் கைலாச வாகனம், அன்ன வாகனம், தங்கக்குதிரை வாக னம், காமதேனு வாகனத்தில் சாமி எழுந்தருளுகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந்தேதி நடைபெறு கிறது. கிறது. அன்று அன்று அதிகாலை 5 மணிக்கு மணிக்கு மேல் 6 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளுகி றார். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10-ந் தேதி காலை 7 மணிக்கு மேல்தேர்க் கால் பார்த்தல் மற்றும் நடரா ஜர் புறப்பாடு நடைபெறு கிறது. இரவு 7 மணிக்கு கேட யத்தில் சாமி புறப்பாடு நடை /பெறுகிறது.

11-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், 12-ந் தேதி இரவு பஞ்சப்பிரகார புறப்பா டும் நடைபெறுகிறது. 13-ந் தேதி தேதி காலை 7 மணிக்குவிடை யாற்றி மற்றும் சுவாமி-அம்பா ளுக்கு அபிஷேக, ஆராதனை கள் நடைபெறுகிறது. விழா விற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லெட்சும ணன் மேற்பார்வையில் கோவில் செயல் அலுவலர் மனோகரன், கோவில் பணி யாளர்கள் மற்றும் அனைத்து கிராம பட்டயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post