திருவெள்ளறை அருகே ஆடுகளை கடிக்கும் வெறி நாய்கள் ; கோழிப்பண்ணை கழிவுகளை உண்ணு நாய்களுக்கு வெறி பிடிப்பதாக வசிப்பிட வாசி குற்ற சாட்டு


திருச்சி மாவட்டம், முசிரி வட்டம், காட்டுகுளம் பஞ்சாயத்துகுட்பட்ட சத்திரப்பட்டி கிழக்கு பகுதியில் பெரியசாமி என்பவர் கோழி மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று அவரது ஆட்டு கொட்டைகையில் புகுந்த வெறி நாய்கள், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதரியதில் 2 ஆடுகள் இறந்து போனது.
மற்ற ஆடுகளுக்கு மருத்துவம் பார்க்க பட்டு வருகிறது.
இது குறித்து ஆட்டின் உரிமையாளர் பெரியசாமி கூறுகையில் ;
இந்த பகுதியில் ஒரு கோழி பண்ணை உள்ளது. இங்குள்ள கோழி இறைச்சிகளை தின்று விட்டு நாய்களுக்கு வெறி பிடித்து மனிதர்களையும் தாக்கும் விதமாக உள்ளது.
இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என ஆதங்பட்டார்.
மேலும் கோழிப்பண்ணை கழிவுகளால் உருவாகும் வெறி நாய்களை பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post