அரசு பேருந்து மோதியதில் 25 அடி உயர பாலத்தின் கீழே விழுந்து உயிர் இழந்த செங்குடி ஆயுதப்படை காவலர் ; திருச்சி அருகே பரிதாபம்

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள செங்குடி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் விவேக் (32).இவர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் விவேக் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தார்.

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள வளைவில் சென்றபோது எதிரே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து இருச்சக்கரத்தின் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட விவேக் 25 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து உடலில் பலத்த காயமடைந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி சிரிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விவேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post