திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சேனப்பநல்லூர் பஞ்சாயத்தில் சுமார் 500 குடும்பத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக 90 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்தேக்க தொட்டி இருந்து வருகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் யாரேனும் குழந்தைகள் விளையாடினால் கூட விழுந்து விடும் போல அபாய நிலையில் உள்ளது.
பஞ்சாயத்து அலுவலகம் அருகிலேயே இப்படி அபாயகரமான குழந்தைகளையும் மக்களையும் அச்சுறுத்தும் இந்த மேல் தேக்க தொட்டியை இடித்து புதிதாக அமைக்கப்பட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்