திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி வடக்கு பஞ்சாயத்தை சேர்ந்த கவுண்டம்பட்டி மேலூர் கிராமத்தில் ஊருக்குள் பள்ளி வாகனங்கள் மற்றும் லாரிகள் வந்து செல்வதுண்டு,
வாகனங்கள் செல்லும் சாலையின் மீது மின்சார கம்பிகள் உரசுவது போல் தொங்கிய நிலையில் காணப்படுகிறது.
லாரி மற்றும் கனகரக வாகனங்கள் வந்து செல்லும்போது யாராவது ஒரு நபர் குச்சியில் மின்சார கம்பிகளை தூக்கி பிடித்தால் மட்டுமே செல்ல முடிகிறது.
மிகவும் ஆபத்தான நிலையில் தொங்கிய நிலையில் இருக்கு மின் கம்பிளை அதிகாரிகள் தலையிட்டு சரிசெய்து கொடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்