பீ.சீ.மீட்டிங் இல் திருப்பைஞ்ஞீலி கோவில் இ.ஓ. வை கண்டித்து வெளிநடப்பு செய்த கிராம மக்கள்


திருப்பைஞ்ஞீலி வனத்தாயி அம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

கடந்த மாதம் குடமுழுக்கு செய்யப்பட்டு, மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவிலின் முன்பு உபயதாரர் பெயர் போடக்கூடாது என்று திருப்பைஞ்ஞீலி சிவன் கோவில் இ.ஓ. சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த கோவில் வனத்தாய் அம்மன் கோவில் மாசி திருவிழா பீ.சீ.மீட்டிங் இன்று மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், திருப்பைஞ்சீலி, மூவராயன்பாளையம், வாழ்மால்பாளையம், ஈச்சம்பட்டி, கவுண்டம்பட்டி கிராமங்களுக்கு வனத்தாயி அம்மன் சப்பரம் எப்போ எப்போ போகவேண்டும் என்று கிராம பட்டையதார்கள் ஒப்புதலுடன் அட்டவணை வெளியிடப்பட்டது.

முடிவில் திருப்பைஞ்ஞீலி அறநிலையத்துறை இணை ஆணையர் வனத்தாயி அம்மன் கோவில் உபயதார்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை எடுக்க வேண்டும் என்றதும்.

அனைத்து கிராமதார்களும் எழுந்து தாலுக்கா அலுவலகம் வெளியில் வந்து வெளிநடப்பு செய்தனர். பிறகு சமாதானம் பேசிய போலீசாரிடம் பேசியதாவது:

நாங்கள் எட்டுப்பட்டி கிராமதார் மக்களிடம் வரி வசூல் செய்து கோவிலுக்கு செலவு செய்திருக்கிறோம், திருப்பைஞ்ஞிலி அறநிலையத் துறை இல் இருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

  அறநிலையத்துறை கோவில் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெயரை எடுக்க சொல்லும் அவர், அந்த சிவன் கோவில் முன்பே ஒருவர் தரை தளம் அமைத்து, கல்வெட்டில் அவரது பெயர் பின்பு சாதியின் பெயரோடு குறிப்பிட்டு கல்வெட்டு வைத்துள்ளார், கோவில் கருவறை முன்பு இரும்பு கேட் அமைத்துள்ளார்கள், அதிலும் தனி நபர் பெயர் எழுதப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக கோவிலின் பின்பு ஒரு தனிநபர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து ஒரு கோவில் அமைந்து வழிபாடு செய்து வருகிறார். இன்னும் பல ஆக்கிரமிப்புகள் செய்து வருபவர்களுக்கு உறுதுணைகாய இருந்து வருகிறார். நாங்கள் தனிநபர் பெயரை போடவில்லை அனைத்து தரப்பு மக்களுக்காக போட்டுள்ளோம் ஆதங்கதுடன் அவர்கள்  கருத்துகளை கூறினார்.

கடைசியில் தாசில்தார் வேண்டுகோளுக்கு இணங்க புறக்கணிப்பை நிராகரித்து 

இப்போதைக்கு திருவிழா வேலை முடியட்டும் என்று அனைத்து கிராம பட்டையதார்களும் கையொப்பம் இட்டு கூட்டத்தை முடித்தனர்.

Post a Comment

Previous Post Next Post