வேப்பந்துறை மங்கம்மா பாலம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் வெள்ளத்தில் மூழ்கியது ; வயலுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதி

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே அய்யாற்றின் குறுக்கே மனப்பாளையம் வேப்பந்துறை இரண்டு கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கொல்லிமலையில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் 7 கி.மீ தொலைவு வரை சுற்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post