திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், தீராம்பாளையம் கிராமத்தில் குமார் மகன் அஜீத் என்பவர் ஜமீன் நாட்டுக்கோழி கறிகடை நடத்தி வருகிறார்.
இதில், வாத்து, ஆடு, நாட்டுக்கோழி அனைத்தும் வளர்த்தும் விற்பனை செய்து வருகிறார். நோம்பு நாளிற்காக வளர்த்து வந்த செம்மறி ஆடுகள் ஒவ்வொரு ஆடுகளும் சுமார் 20 முதல் 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யலாம் என வைத்திருந்தார்.
ஆனால் இந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் நேற்று இரவு ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து உள்ளே இருந்த 5 ஆடுகளில் 4 ஆடுகளை கடித்து குதறியதில் இறந்து போயின. மற்றும் இன்னொரு ஆடும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இது போலவே தீராம்பாளையம் கிராமத்தின் பல ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை கடித்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் நேரில் சென்று பார்வையிட்டு உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கலாம் என சான்றிதழ் கொடுத்துள்ளனர். நகையை அடமானம் வைத்து ஆடுகள் மீது முதலீடுகள் செய்து இழப்பாகி விட்டது என்றும், அதிகாரிகள் தனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.